யாழ் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிற நிலையில் நேற்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியின் முன் பகுதியில் மழை நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
மழை நீர் வெளியேறுவதற்குரிய வாய்க்கால் அடைபட்டு காணப்படுவதால் நீர் வெளியேறுவதற்கு எந்தவொரு வழியும் இல்லாத நிலையிலேயே குறித்த பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
இதனை சரி செய்தால் மாத்திரமே மழை நீரினை அகற்ற முடியும். மேலும் குறித்த பெண்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் ஆடைகள் நனைந்தவாறே விடுதிக்கு செல்கின்ற சிரம நிலை ஏற்பட்டுள்ளது.