வடமாகாணத்தில் போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மோப்ப நாய் சகிதம் பருத்தித்துறை பொலிசார் நேற்று வியாழக்கிழமை (10) பிற்பகல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலைமையிலான பொலிசாரே இவ் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை சந்தை, பருத்தித்துறை முச்சக்ர வண்டி தரப்பிடம், மந்திகைச் சந்தை, மந்திகை வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.