உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஆணையகம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேர்தலினை நடாத்துவதற்குப்பதிலாக ,மக்களின் ஆணைகளை பெறுதற்கு பதிலாக, இருப்புக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக தேர்தலினை எப்படி பிற்போடுவது என்று விளையாடி வருகிறார்கள் என ஜே.வி.பி இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்:
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
ரணில் ராஜபக்ஷவின் அவரது மாமனாரான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கால வரலாற்றில் தேர்தல்களை பிற்போடுவது,அடக்குமுறைகளை கடடவிழ்த்து விடுவது ,ஜனநாயகத்தை புதை தோண்டி புதைப்பது வரலாறாக இருக்கின்றது.இதே போல் ரணில் ராஜபக்ஷவும் தேர்தலினை பிற்போடுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்.
எனவே தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறக்கக்கூடிய நிலையில் அல்ல.அரசாங்கத்தின் பிரதானமான மொட்டுக்கட்சி 7,8 துண்டுகளாக பிரிந்து,சிதைந்து நாசமாகி போய் விட்டது.எனவே இதனால் தேர்தலினை வெற்றி பெற முடியாது.அரசாங்கம் தோல்வியடைவதை தவிர்க்க முடியாது.
இளைஞர் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகிறது.தேர்தல் வட்டாரங்கள் அதிகமாகக் காணபப்டுபவத்துடன் வட்டாரத் தலைவர்கள் அதிகமாக காணப்படுகின்றன.இவை அனைத்தும் நாட்டிற்கு சுமையாக காணப்படுகிறது.
இவை அனைத்துக்கும் ஜனநாயகத்துக்கு முரணான விடயங்கள் என ரணில் கூறுகின்ற போக்கு காணப்படுகிறது.கடந்த 2015,2019 ஆம் ஆண்டு ஆட்சியின் போது இந்த ரணிலின் தலைமையில் தான் இந்த சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
தனது கையால் நிர்மாணிக்கபப்ட்ட இந்த தேர்தல் சட்டங்கள் இன்றைக்கு அவரின் தலையில் மண்ணை வாரி போடுகின்ற ஒரு நிகழ்வாக வந்திருக்கின்றது.இதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஏற்பட இருக்கின்ற ஆபத்தினை புரிந்து கொண்டு இந்த தேர்தலினை பிற்போடுவதற்காக வித்தை விளையாட்டினை காட்டுகிறார்.
இவர் தேர்தலினை பிற்போடுவதற்கு பிரதானமான காரணம் இருக்கிறது.அது என்னவெனில் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பொழுதொரு வண்ணமாக மக்களின் விருப்பத்தினை பெற்று வருகிற ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.
எனவே தேசிய மக்கள் சக்தி நிகழ்த்துகின்ற நிகழ்வுகளில் மக்கள் அணி திரண்டு வருகிறார்கள்.அனைவரும் காலங்களில் ஒரு முறையாவது இந்த ஜே.வி.பி இனை பரீட்சித்து பார்ப்போம் என்ற நிலைக்கு தென்னிலங்கை மக்கள் இன்றைக்கு அணி திரண்டு வருகிறார்கள்.
அவ்வாறாக நாட்டில் மாற்றம் ஒன்று நிகழுமாக இருந்தால் இவர்களுடைய ஆட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும்,நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல்,மோசடிகள் முடிவுக்கு வரும் என்று இவர்களுக்கு தெரியும் .இதுவும் தேர்தல் பிற்போடுத்தற்குரிய காரணமாகும்.என்றார்.