ளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் நிறைவேற்று மட்ட அதிகாரிகள் கடந்த 09-11-2022 அன்று அனுராதபுரம் நோக்கி புகையிரதத்தில் பயணமொன்றை மேற்கொண்டனர்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் வழக்கம் போல் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்தால், வாகனங்களுக்கு எரிபொருள், ஓட்டுனர் கொடுப்பனவு மற்றும் இதர செலவுகளுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் செலவாகும் பட்சத்தில் அதனை குறைத்து நாட்டின் வருமானத்தை மீதப்படுத்தும் நோக்கில் அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ததால், சுமார் 100,000 ரூபாயளவில் மட்டுமே செலவாகியிருந்தது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு சேமிப்பாக மீதம் உள்ள தொகை சுமார் 11 இலட்சம் ரூபா அளவிளாகும்.. இதனால் அரச வளங்களை கட்டுப்படுத்த விளையாட்டு அமைச்சர் இவ்வாறானவொரு முன்னுதாரண செயற்பாட்டை செய்தது பலரது பாராட்டுதல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபை ஆகியன இணைந்து நடத்தும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சித் தொடரின் முதல் நிகழ்ச்சியாக வடமத்திய மாகாணத்தில் ஆரம்பமான விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே அமைச்சர் இவ்வாறு ரயில் பயணம் மேற்கொண்டிருந்தார்.