தென்னாபிரிக்கா முன்னாள் ஜனாதிபதியின் நோபல் பதக்கம் திருட்டு

தென் ஆபிரிக்கா,நவ 11

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி எவ்.டபிள்யூ டி கிளார்க்குக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுக்கான பதக்கம் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக 1989 ஆண்டு முதல் முதல் 1994 பதவி வகித்தவர் எவ்.டபிள்யூ டி கிளார்க். நிறவெறி ஆட்சிகால தென் ஆபிரிக்காவின் கடைசி ஜனாதிபதி அவர்.

தென் ஆபிரிக்காவில் நிறவெறி முறையை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்புக்காக நெல்சன் மண்டேலாவுக்கும் எவ்.டபிள்யூ டி கிளார்க்குக்கும் 1993 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி எவ்.டபிள்யூ டி கிளார்க் காலமானார்.
இந்நிலையில், அவரின் நோபல் பரிசுப் பதக்கம் வீட்டிலிருந்து  திருடப்பட்டுள்ளதாக அவரின் விதவை மனைவி எலிட்டா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி இத்திருட்டை  தான் உணர்ந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணமொன்றின் பின்னர் வீடு திரும்பியபோது பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டு, அது  வெறுமையாக்கப்பட்டிருந்தது என எலிட்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply