யாழில் சீரற்ற காலநிலை: 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம்,நவ 11

யாழ் மாவட்டத்தில் காண காணப்படுகின்ற சீரற்றஙகாலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

கரவெட்டி. யாழ்ப்பாணம் .பருத்தித் துறை. மருதங்கனி மற்றும் சாவச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது

பருத்தித் துறை பிரதேச செயலர் பிரிவில் கூடுதலான பாதிப்பாக201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடுபொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெயர்ந்த
14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்

மருதங்கணி பிரதேச செயலர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 171 பேர்   வெள்ளம் காரணமாகபொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய சமைத்த உணவு மற்றும் தங்குமிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *