கொழும்பு,நவ 11
குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரை குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
IDH வைத்தியசாலையில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.