தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் பிரதி உதவிச் செயலாளர் அப்ரின் அக்தர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்தும் வழங்குமாறு பிரதி உதவிச் செயலாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.