புத்தளம் சிராம்பையடி பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று நேற்று இரவு அப்பகுதி மக்களால் உயிரிடன் பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் மலைப்பாம்பை மீட்டு தப்போவ சரணாலயத்தில் விடுவித்தனர்.
குறித்த மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளமுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.





