அபுஜா, நவ 11
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே கார் ஒன்று நின்றுள்ளது.
காரை பார்த்ததும் டேங்கர் லாரியை டிரைவர் நிறுத்த முயன்று இருக்கிறார். ஆனால், லாரியின் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாடை இழந்த லாரி காரின் மோது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் டேங்கர் லாரி வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.