ட்விட்டர் சமுக வலைத்தளத்தினூடாக மாதாந்தம் 8 டொலருக்கு Blue tick அடையாளத்தை செயற்படுத்திக்கொள்ளும் திட்டத்தை அந்த நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் டெஸ்லா நிறுவுனர் எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பயனர்களுக்கு மாதாந்த சந்தா திட்டத்தின் படி Blue tick அடையாளத்திற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற நம்பகமான தரப்பினரை பின்தொடர Blue tick முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.
எனினும், கட்டணம் செலுத்தியவர்களில் பலர் போலியான ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போலியான தரப்பினரின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கட்டண அடிப்படையிலான Blue tick செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.