நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு

நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, ஹோமாகம, மஹரகம, பிட்டகோட்டே, கடுவெல மற்றும் கொதடுவ ஆகிய பகுதிகள் டெங்கு நுளம்பு பரவும் அதிக அபாயம் கொண்ட பிரிவுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டம் –  அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய, ஜா-எல, களனி உள்ளிட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் கொண்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டம் – பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்தில் 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் – 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணம் – புத்தளம், கற்பிட்டி, வென்னப்புவ மற்றும் மஹவெவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஊவா மாகாணம் – பதுளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டம் – வரக்காபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *