அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.ஜே.எஸ்.விஜேசிங்கவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி திரு.வருண ஜயசுந்தரவின் உத்தரவு மற்றும் பணிப்புரையின் பேரில், விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ தள அதிகாரிகளுக்கு விமானப்படை புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு.கே.ஜி.என்.பெரேரா மேற்பார்வையில் விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.கே. பீரிஸ் மற்றும் அம்பாறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நேற்றைய தினம் (11.11.2022) உஹன பொலிஸ் பிரிவில் உஹன நகரில் உள்ள நியூ திஸாநாயக்க கெமிக்கல்ஸ் கடை மற்றும் உவனி அக்ரோ ஸ்டோரில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த உஹன பிரதேசத்தில் வசிக்கும் 33 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணையின் போது, இந்த தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது தெரியவந்ததுள்ளது.