யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் 4 பேர் கொண்ட வன்முறை கும்பலால் வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதை, சிறுமியின் பெற்றோர் தடுத்துள்ளனர்.
இதனால் சிறுமியின் குடும்பத்தினர் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
இதனால், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டுக்கு தீ வைத்தது.
எனினும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் தகவலின்படி 4 பேர் கொண்ட கும்பலால் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.