வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியூடாக மோட்டார் சைக்கில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரின் பேருந்து குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.