இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள்; இவ்வாறு சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.