சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஹைட் கொழும்பு திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று வரை எவ்வித இலாபமும் ஈட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, , 2021 டிசம்பர் 31 க்குள் “த பைனேன்ஸ் கம்பனி” யின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், நிதியம் 205.49 மில்லியன் ரூபாவை இழந்துள்ளது.
மேலும், பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் 5,000 மில்லியன் ரூபா அதாவது 53%, 2013 இல் கென்வில் ஹோல்டிங் ஹோட்டல் வளாகத்தை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்ட நிலையில் ஹோட்டல் வளாகத்தின் கட்டுமானம் தொடர்பான கிரேன்ட் ஹைட் கொழும்பு திட்டத்தின் கட்டுமானம் 2020 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும், ஹோட்டல் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2021 டிசம்பர் 27 க்குள் முடிக்கப்படவில்லை என்றும், 8 ஆண்டுகள் ஆகியும், முதலீட்டில் இருந்து நிதி எந்த பலனையும் பெறவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும், நிதியத்தின் உறுப்பினர்களுக்கு மீள் பதிவு செய்வதற்கும் 12.61 மில்லியன் ரூபா செலவில் 15,000 அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், இந்த அட்டைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் 17.67 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 35 இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 33 இயந்திரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.