சவுதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தம்பியா தவராசா என்ற நபரின் சடலமே இவ்வாறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் இருபது வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்த அவர், சவூதி அரேபியாவின் தம்மாமில் இறந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவை அமைப்பின் வாகனச் சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.