கலவானை நகரில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை கைது செய்ய முயன்ற உப பொலிஸ் பரிசோதகர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்ய முற்பட்ட போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயமடைந்த நபர் கலவானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் என கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மது அருந்திய சந்தேக நபர் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.