வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் எற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ணகடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவுபகலாக வடமராட்சி இளைஞசர்களால் இன்றில் இருந்து முன்னெடுக்க
ப்பட்டுவருகின்றது.
இப்பட்டத்திருவிழா என்பது பாரம்பரிய ஒருதிருவிழாவாக வடமராட்சி வாழ் மக்களிடம் இருந்துவருகின்றது.அந்த திருவிழா வருடாந்தம் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் ஆண்டு 2023.01.14 அன்று தைப்பொங்கல் அன்று மாலை வல்வெட்டித்துறை
திறந்தவெளிகடற்கரையில் இப் பட்டத்திருவிழாப்போட்டி நடாத்தப்படவுள்ளது.
இதில் 85 பட்டங்கள் 14.01.2023 அன்று எற்றப்படவுள்ளதாக வடமராட்சிப்பட்டக்குழுவின் நெறிப்படுத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாத்தொற்று நிலைமை காரணமாக இப்பட்டத்திருவிழாப்போட்டி நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.