செங்கலடி பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி 30 வருடமாக வடிச்சல் இன்றி அவதியுற்ற விவசாயிகளுக்கு நேரக்குடா வடிச்சல் பகுதியினை வடிச்சல் வாய்க்கால் புனரமைப்பு செய்து கொடுக்கப்படுகின்றது.
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.நாகரெட்ணம் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச ஏந்திரி விஷ்னுரூபன் மேற்பார்வையில் கனரக வாகனம் உதவியுடன் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
களுத்துறையில் இருந்த கனரக வாகனத்தை கடும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு வந்து விவசாயிகளின் நன்மை கருதி 30 வருடமாக வடிச்சல் இன்றி அவதியுற்ற விவசாயிகளுக்கு வாய்க்கால் புனரமைப்பு செய்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்தார்.