உலக வங்கியின் கடனுதவியின் கீழ் மேலும் 22,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் 48,000 மெற்றிக் தொன் யூரியா உரம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தொகுதி உரம் சீனாவிலிருந்தும் இரண்டாவது தொகுதி மலேசியாவிலிருந்தும் பெறப்பட்டுள்ளது.
இந்தப் பருவத்திற்காக ஒரு இலட்சத்து இருபதாயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பெரும் போகத்தின் பின்னர் இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே. முட்டை மற்றும் கோழிப்பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.