உணவு இல்லை – பாடசாலை செல்ல தயக்கம் காட்டும் மாணவர்கள்! ஆய்வில் தகவல்

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 10 வீதமானோர் உணவு இல்லாமை உட்பட முக்கிய மூன்று காரணங்களால் பாடசாலை செல்வதற்கு தயங்குவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளதென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த் அத்துகோறள தெரிவித்தார்.

நாடு முழுவதுமுள்ள 360 பாடசாலைகளில் 370 ஆசிரியர்களை ஈடுபடுத்தி மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் பாடசாலை வர தயங்குவதற்கு முதற்காரணம் போக்குவரத்து பிரச்சனை எனத் தெரிவிக்கும் பேராசிரியர், உணவு இல்லாமை இரண்டாவது காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு முடியாதுள்ளமை மாணவர்கள் பாடசாலை செல்லத் தயங்குவதற்கு மூன்றாவது காரணமாகவிருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *