மன்னார் சாந்திபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு தீப்பற்றி வெடிப்பு!

மன்னார் – சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு 10 மணியளவில் எரிவாயு அடுப்பு தீ பற்றி எரிந்தது வெடித்துள்ளது.

கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையிலேயே, அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது,

எனினும், உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்தியமையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் வீட்டார் தெரிவித்துள்ளனர்

தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ, ரெகுலேட்டர்களிலோ, வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்து வெடித்துள்ளது.

கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!

Leave a Reply