வவுனியாவில் நாவலர் பெருமான் நினைவுநாள் நிகழ்வு

சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஆறுமுகநாவலரின் நினைவுநாள் நிகழ்வு வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மற்றும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, நாவலரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடிகளார் தொடர்பான சிறப்புரையை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சுமந்திரன், சு.காண்டீபன், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கு.நந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இரத்தம் சிந்திய விடயங்களை மறந்து தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க சிந்திக்க வேண்டும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

Leave a Reply