மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ் பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை மறித்து சோதனையிட்டதில் அதில் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டன.

இதன் போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர்களையும் லொறியையும் இலுப்பைக்கடவை பொலிஸார் கைபற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply