ஆர்ஜென்டியா அணியுடனான வெற்றியை அடுத்து சவுதி முழுவதும் விடுமுறை அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தையடுத்து சவுதி அரேபியா ழுமுவதும் நாளை புதன்கிழமை விடுமுறையாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply