மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்தார்.
கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கத் தீர்மானம்






