கொழும்பு – வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கெசல்வத்த பவாஸ் என்றழைக்கப்படும் இளைஞரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று, குறித்த இளைஞரை வாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் தொடர்பில் ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






