காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை

<!–

காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை – Athavan News

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க  6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply