ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களையே அறிக்கையிட வேண்டும்! ஞானசார தேரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமானகலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று இரவு கல்முனை பகுதியில் அமைந்துள்ள இரு வேறு இடங்களிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் மக்கள் கருத்தறியும் செயலமர்வுகள் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், நேற்று மாலை கல்முனை பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

கல்முனை தாருஸ்ஸபா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த இக்குழுவினர், கல்முனை முஸ்லிம் முக்கியஸ்;தர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கல்முனை வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கல்முனையின் சமகாலத்தேவைகள் பற்றிய மகஜரொன்றும் இவரிடம் கையளிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

அங்கு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஞானசார தேரரை இடைமறித்து ஊடகவியலாளர்கள் விஜயத்தின் நோக்கம் தொடர்பில் வினவினர்.

இதன்போது ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவையும் சென்று பார்வையிட்டார்.

வடமராட்சி கடலில் கரை ஒதுங்கிய இந்தியர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம்!

Leave a Reply