மின்மானியை மாற்றி, சட்டவிரோதமாக வீட்டுக்கு மின்சாரம் பெற்றார் எனக் கூறப்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவியை மின்சார சபையின் அதிகாரிகள் கைது செய்து , கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர் அரச வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமையாற்றுகின்றார்.
சந்தேகநபரான பெண்ணின் கணவர், புத்தளம் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையமொனறில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் மானியை மாற்றி சட்ட விரோதமாக மின்சாரத்தை பெறுவதாக மின்சார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டு அவரை கைது செய்து கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்துள்ளனனர்.