மின்மானியை சட்டவிரோதமாக மாற்றி வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக் கொண்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியராக கடமையாற்றுவதுடன் அவரின் கணவர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுவது தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சட்ட விரோதமாக வீட்டுக்கு மின்சாரம் பெற்றர், என மின்சார சபையின் அதிகாரிகளால் கைது செய்து கலென்பிந்துனுவெவ போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்மாணியை மாற்றி சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்றதாக மின்சார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்டு திடீர் சோதனையில் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.