மஹவ இரிபிஸ்ஸ பகுதியில் மரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொல்பித்திகம பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்