மிளகாய் தூளில் கலப்படம்!

சந்தைக்கு மிளகாய்த் துண்டுகள் மற்றும் மிளகாய்த் தூளை விநியோகித்துக் கொண்டிருந்த லொறியொன்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில் மிளகாய் தூள் மற்றும் மிளகாய் துண்டுகளில், 50 சதவீதமான உப்பு, கோதுமை மா மற்றும் கலரிங் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மாதிரிகளை இரசாயன பரிசோதகருக்கு அனுப்பி கிடைக்கப்பெற்ற அறிக்கையில் இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் இவ்வாறான விடயங்களைச் சேர்ப்பதன் மூலம் மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடுவதாக அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர் ஹன்சிக நதீஷ் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர், மனித பாவனைக்குத் தகுதியற்ற 368 கிலோ மிளகாய்த் தூளை அழிக்குமாறு பலப்பிட்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *