யாழ். பல்கலையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததின கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் – பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபிக்கும் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி நினைவு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 68வது பிறந்ததினத்தை  இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *