தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை (21) உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் தூபியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை மாவீரர் நாள் வார இறுதி நாள் நாளை ஆகும். இந்நிலையில் வடமாகாணத்தின் பல பாகங்களிலும் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.