கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்காக மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற்பீட தமிழ் மாணவர்களால் 13 வருடங்களாக நடாத்தப்படும் முன்னோடிப்பரீட்சை இவ்வருடமும் 22 மாவட்டங்களை உள்ளடக்கிய 68 பரீட்சை நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிமூலமாகவும் இடம்பெறவுள்ளது.
இன்று (26/11/2022) பரீட்சையானது நாடு பூராகவும் ஒழுங்குபடுத்தபட்ட பரீட்சை நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
உங்கள் பரீட்சை சுட்டெண்ணை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
Mora Exams பரீட்சைக்கான அறிவுறுத்தல்கள்
1. பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவ வேண்டும்.
2. பரீட்சை மண்டபத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் சமூகமளிக்க வேண்டும்.
3. பரீட்சை சுட்டெண் சார்ந்து ஏதும் இடர்பாடுகள் இருந்தால் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி எண்களிற்கு அழைப்பை மேற்கொள்ளவும்.
076 171 1351 – Parisith
076 427 7631 – Sukithan
076 626 9153 -Thamilezai
பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்களை கீழ் உள்ள உத்தியோகபூர்வ மீஇணைப்பினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
Find your index number
Mora exam 2022
https://moraetamils.com/find_indexnum.html