தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் யாழின் பல பகுதிகளில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.
இதற்கமைய தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ் .மத்திய பேருந்து தரப்பிடத்தினை சூழவுள்ள பகுதிகள் ,யாழ்.பல்கலைக்கழகம் , நல்லூர் என யாழின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது.
”கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீர மறவர்களின் மாவீரர் நாள் ”என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.