போதைப் பொருட்களுடன் 27 வயது பெண் ஓருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.
நேற்று கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜே.ரத்நாயக்கவின் வழிகாட்டலின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்ற வீட்டை சுற்றி வளைத்தனர்.
இதன்போது திருமணமான 27 வயதுடைய பெண் ஒருவரை போதைப் போருட்களுடன் கைது செய்தனர்.
குறித்த பெண்ணிடம் 11 கிரோமும் 50 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருளையும், 435 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றினர்.
மேலும் சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.