புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவேன்! எலான் மஸ்க் அதிரடி

புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவது தொடர்பாக டுவிட்டரில் எலான் மஸ்க் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் நிகழ்த்தும் அதிரடி மாற்றங்கள் ஆனது உலகம் முழுவதும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ப்ளூ டிக்கிற்கான கட்டணம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆப்-இன்-ஆப் பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிட்ட கமிஷனை, அதாவது 15 – 30% வரையிலான கமிஷனை தங்களுக்கு செலுத்துமாறு ஆப்ஸ் டெவலப்பர்களிடம் ஆப்பிளும், கூகுளும் கேட்கின்றன.

இதனால் ட்விட்டர் நிறுவனமானது ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த விஷயத்தை எலான் மஸ்க் எப்படி கையாள போகிறார் என்கிற கேள்வி டுவிட்டரில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதாவது ஆப்பிள் மற்றும் கூகுள் தங்கள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ட்விட்டரை வெளியேற்ற நினைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு எலான் மஸ்க், அப்படி ஒரு சூழல் வராது என நம்புகிறேன், அப்படி வந்தால் ஆம்! வேறு வழியில்லை நான் ஒரு மாற்று செல்போனை உருவாக்குவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *