மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டி நடமாடும் சேவையூடாக இன்று சனிக்கிழமை (26) மூதூர் – இரால்குழி பகுதி மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.ஷபீக் தலைமையில் இரால்குழி ப.நோ.கூ.சங்க பொதுச்சபை உறுப்பினர் திருமதி சிவலிங்கம் ராஜகுமாரி (கிளைக்குழு மகளிர் அணி தலைவர்) ஒருங்கிணைப்பினூடாக இரால்குழி பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.