நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் 27.11.2022 இன்று  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இவ்வாறு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின்னர் ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, தாயக விடுதலைக்காக உயிர்நீத்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *