மன்னார் – மதவாச்சி பிரதான புகையிரத வீதியில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் மாடு ஒன்றை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் தள்ளாடி பகுதியில் நேற்று இரவு புகையிரதத்தில் மோதிய மாடு ஒன்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு இறைச்சிக்காக குறித்த மாட்டை வெட்டி இன்று உயிலங்குளம் பகுதியில் விற்பனை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, உயிலங்குளம் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஜே.றூபன் ரொனி சில்வாவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதிக்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்த மாட்டை வெட்டி இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறைச்சியை மீட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டதோடு, குறித்த மாட்டு இறைச்சியும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த மாட்டு இறைச்சியை அழிக்கவும், சந்தேக நபரை பிணையில் செல்லவும் உத்தரவிட்டார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் குறித்த மாட்டு இறைச்சி மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்துக் கொலை: பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!






