தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இன்றையதினம் இலங்கை உட்பட தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் யாழில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.