இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் இன்று கொழும்பில் மிகவும் சாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
கசுன் ராஜித, சரித் அசலங்கா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று கண்டி பல்லேகலவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இவர்கள் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
எனினும், திருமண நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கண்டி, பல்லேகலையில் புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது





