கிளிநொச்சியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  பிற்பகல் 3.30 மணியளவில்  மர்மப்  பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சிவலிங்கம் யுவராஜ்(வயது-25) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், சிவலிங்கம்  நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வெடிப்பு சம்பவம்  இடம்பெற்ற  வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply