_6384896a3a67b.jpg)
வாகன சாரதிகளுக்கான டிமெரிட் புள்ளி முறை 2023 ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமான வாகன சாரதிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
டிமெரிட் புள்ளி முறை அங்கீகரிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, 32 குற்றங்களுக்கான புள்ளிகள் குறைக்கப்படும் என்றும், 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால், வாகன சாரதிகளின் உரிமம் ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சோதனைக் காலத்தில் வாகன சாரதி ஒருவர் 12 புள்ளிகளைப் பெற்றால், அவ்வாறான நபர்கள் ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
விபத்துக்குள்ளானால் 10 புள்ளிகளும், 150 கிலோமீற்றர் வேக வரம்பை மீறினால் எட்டு புள்ளிகளும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் ஆறு புள்ளிகளும் கழிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





