ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பினருக்கும் இடையே தற்சமயம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியியைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்துகின்றனர்.
அதில் இரண்டு பேர் அமைச்சர் பதவி வகிக்கின்றனர்.
6 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.
கட்சியின் தீர்மானத்தை மீறி அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தி 8 பேரின் உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதுதவிர, கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பினரை ஜனாதிபதி சந்திக்கிறார்.