2030 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதிசொகுசு உல்லாச கப்பல்!

அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நாளை இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது.

குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும் 945 கப்பல் பணியாளர்களும் வந்துள்ளனர்.

‘மெயின் ஷிப் 5’ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) இரவு கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதுடன் புதன்கிழமை (30) இரவு இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்ற நான்கு சொகுசு கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை துறைமுக தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *